தமிழக எழுத்தாளர் இமையத்தை கவுரவப்படுத்தும் மத்திய அரசு.!

இந்தியாவில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்காக மத்திய அரசு சார்பில் ஆண்டு தோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2020ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-03-12 12:54 GMT

இந்தியாவில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்காக மத்திய அரசு சார்பில் ஆண்டு தோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2020ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 20 மொழிகளில் சிறந்த இலக்கியவாதிகளுக்கு சாகித்ய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது தமிழகத்தைச் சேர்ந்த எழுதாளர் இமையத்திற்கும் வழங்கப்படுகிறது. இவர் செல்லாத பணம் என்ற நாவல் எழுதினார். இதற்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது பெறுபவர்களுக்கு தாமிர பட்டம் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். தமிழகத்தை சேர்ந்தவரை மத்திய அரசு கவுரப்படுத்துவது அனைவருக்கும் பெருமையே.

Similar News