தமிழ் சித்தர் அகத்தியர் பிறந்தநாள்: வரும் ஜனவரி 2-ந் தேதி மத்திய அரசின் ஆயுஷ் துறை கொண்டாட்டம்.!

தமிழ் சித்தர் அகத்தியர் பிறந்தநாள்: வரும் ஜனவரி 2-ந் தேதி மத்திய அரசின் ஆயுஷ் துறை கொண்டாட்டம்.!

Update: 2020-12-16 08:30 GMT

பிரதமர் நரேந்திர மோடி அரசில்தான் கடந்த 2 ஆண்டு காலமாக நம் தமிழ் சித்தர் அகத்தியர் பிறந்த நாளை முன்னிட்டு சித்தவைத்திய தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி வரும் 2- ந்தேதி ஆயுஷ் அமைச்சகம் சார்பில் திங்கள்கிழமைகளில் சிறப்பு சித்த மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் ஆயுஷ் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் அகத்தியரை பற்றிய குறிப்புகளும், கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை அகத்தியருக்கு உண்டு என தமிழ் வரலாறு குறிப்பிடுகிறது. 

தமிழ் மொழியின் தந்தை என்றும் தமிழ் இலக்கணத்தின் தந்தை என வழங்கப்படும் அகத்தியரை பற்றி சங்க இலக்கியங்கள் புறநானுாறு ஆகியவற்றில் பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன.  இந்த மிகப்பெரிய மகானின் பெருமையை நாடு முழுவதும் வெளிப்படுத்தும் விதத்தில் நரேந்திர மோடி அரசு கடந்த 2 ஆண்டுகளாக அவரின் பிறந்த நாளை சித்தவைத்திய தினமாக கொண்டாடி வருகிறது.  

சித்த வைத்தியத்தின் தந்தை என போற்றப்படும் சித்தர் அகத்தியரின் பிறந்த நாளை ஒட்டி ஆண்டுதோறும் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் தேசிய சித்தா தினம் கொண்டாடப்படுகிறது. முதலாவது சித்தா தினம் 2018 ஜனவரி 4 ஆம் தேதி, அகத்தியர் பிறந்த மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டது. 

இரண்டாவது சித்தா தினம் 2018 டிசம்பர் 26 - லும், மூன்றாவது சித்தா தினம் 2020 ஜனவரி 13 ஆம் தேதியும் கொண்டப்பட்டது. நான்காவது சித்த மருத்துவ தினம் அகத்தியரின் பிறந்த நட்சத்திர நாளான 2021 ஜனவரி 2 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. நான்காவது சித்தா தினத்தை ஒட்டி அனைத்து திங்கள் கிழமைகளிலும் சிறப்பு சித்த மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. 

அன்றைய நாள்களில் பல்வேறு நோய்களுக்கான நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும். சர்க்கரை நோய், இருதயக் கோளாறுகள், தைராய்டு, கால் மூட்டு வலி, கருப்பை கோளாறுகள், போன்றவற்றுக்குப் பரிசோனை நடத்தி மருந்துகள் அளிக்கப்படும்.

இவை தவிர சித்த மருந்துகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சுப் போட்டிகளும் நடத்தப்படும்.  மாறிவரும் தலைமுறைகளிலும் மாறாதிருக்கும் சித்த மருந்துகள் என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு, திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தில் டிசம்பர் 29 ஆம் தேதி காலை 10 மணிக்கு பேச்சுப் போட்டி தொடங்கும் என அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது

Similar News