மாநில அரசுகளின் கையில் அதிக பணம் புழங்க : 96 ஆயிரத்து 82 கோடி ருபாய் வரி பங்கீட்டு தொகையை விடுவித்தது மத்திய அரசு !

Update: 2021-11-24 06:35 GMT

ரூபாய் 95 ஆயிரத்து 82 கோடியை மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வரி பங்கீடு  தொகையாக பகிர்ந்து விடுத்துள்ளது.

 மாநிலங்களின் உள்கட்டமைப்பு மற்றும் மாநில அரசுகளின்  கையில் பணம் புழங்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு வரி வருவாயை பல தவணைகளாக பங்கீடு செய்து மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. 




மாநில அரசுகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மாநில அரசுகளுடன் சமீபத்தில்  ஆலோசனை நடத்தினார் அப்போது  மாநில அரசுகளுக்கான வரி பங்கீடு தொகை விரைவில் விடுவிக்கப்படும் என்று கூறினார்.

இந்நிலையில்  நேற்று ரூபாய் 96 ஆயிரத்து 82 கோடியை இரண்டு தவணையாக விடுவித்தது மத்திய அரசு.

மாநில அரசுகள் மத்திய அரசு வழங்கிய இந்த வரி பங்கீட்டு தொகையைப் பயன்படுத்தி, தங்களுக்கான உரிய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Image : Medium

Image : NEWS 24

The Hindu

Tags:    

Similar News