செல்போன் உதிரி பாகங்களுக்கு வரிச்சலுகை.. மத்திய நிதியமைச்சர்!

செல்போன் உதிரி பாகங்களுக்கு வரிச்சலுகை.. மத்திய நிதியமைச்சர்!

Update: 2021-02-01 13:25 GMT

இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் பல திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்து அதனை நாடாளுமன்றத்தில் பேசி வருகிறார்.

இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன் உதிரி பாகங்களுக்கு  வரிச்சலுகை ரத்து செய்யப்படுகிறது என்று கூறினார்.

மேலும், இதுவரை வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட சில உதிரி பாகங்களுக்கு மட்டும் 2.05 சதவிகிதம் மட்டும் இறக்குமதி வரிவிதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று கூறினார். இந்த அறிவிப்பு செல்போன் கடை உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Similar News