ஆளுநரே வேண்டாம் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் - முரசொலிக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி
ஒரு சில பல்கலைக்கழகங்கில் நடைபெற்ற தனிநபர் தவறுகளை பட்டியலிட்டு எல்லா ஆளுநர்களும் தவறு செய்வதை போன்ற ஒரு தோற்றத்தை கற்பிக்க முயற்சிப்பது தவறான முன்னுதாரணம் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஆளுநர்களே வேண்டாம் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தி.மு.க., நாளேடான முரசொலியில் ஆளுநர்கள் வரம்பு மீறுவதால் வருகின்ற வம்புகள் என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் ஆளுநர்கள் பல்கலையில் வேந்தர்களாக செயல்படுவது பற்றியும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை குறித்த விமர்சனமும் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முரசொலி கேள்விக்கு தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆளுநர்கள் வேந்தர்களாக பல்கலைக்கழகங்களை மேம்படுத்திக்கொண்டிருக்கின்றனர் என்று நான் கூறியது என்னுடைய அனுபவத்தை வைத்து சொல்கிறேன். ஆளுநர்களை பொறுத்தமட்டில் ஆக்கப்பூர்வமாகதான் செயல்பட்டு வருகிறார்கள்.
தெலங்கானா ஆளுநராக வேந்தர் பொறுப்பிலிருந்து நான் தெலங்கானா பல்கலைக்கழங்களை மேம்படுத்துவதற்கு பல்வேறு பணிகளை செய்துள்ளேன். அதில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட துணை நின்றேன். இது போன்று பல்வேறு விஷயங்கள் உள்ளது. இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Source,Image Courtesy News 18 Tamilnadu