புதிய மைல்கல்லை எட்டிய சட்ட சேவைத்திட்டம்.. பிரதமர் மோடி ஆட்சினா சும்மாவா..
தொலை சட்ட சேவைத்திட்டம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
உண்மையான குற்றவாளிகள் எப்பொழுதும் தண்டனை பெறக்கூடிய நபர்கள்தான். மக்களுக்கு எதிராக குறிப்பாக ஏழை மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்ட வரக்கூடிய ஒரு இடம் தான் நீதிமன்றம். இந்த நீதிமன்றத்தில் எளிதாக அவர்களுக்கு நீதி கிடைக்க மோடி அரசு வழிகாட்டியாக இருக்கிறது.
தொலை சட்ட சேவைத்திட்டம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது, 40 லட்சம் பேருக்கு வழக்குக்கு முந்தைய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் தொலை சட்ட சேவைத் திட்டம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இத்திட்டத்தின் நாடு முழுவதும் 40 லட்சம் பயனாளிகள் வழக்குகளுக்கு முந்தைய ஆலோசனைகளை பெற்று பயனடைந்துள்ளனர்.
தொலை சட்ட சேவைப் பற்றிய விளக்கம்: சட்ட சேவைகளை எளிதில் பெற முடியாதவர்களுக்கு வழக்குக்கு முந்தைய கட்டத்தில் சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கான ஒரு இணையதள வழிமுறையாக இது செயல்படுத்தப்படுகிறது. ஊராட்சி அளவில் அமைந்துள்ள பொது சேவை மையங்களில்(சி.எஸ்.சி) உள்ள காணொலிக் காட்சி அல்லது தொலைபேசி வசதி மூலம் சட்ட உதவிகளை தேவைப்படுபவர்கள் பெற முடியும்.
சட்ட உதவி தேவைப்படும் ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்களை வழக்கறிஞர்களுடன் இது இணைக்கிறது. 2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தொலை சட்ட சேவை இப்போது டெலி-லா எனப்படும் மொபைல் செயலியின் மூலமாகவும், நேரடியாக கிடைக்கிறது.
Input & Image courtesy:News