நூறு ஆண்டுகால பழமை வாய்ந்த கோவிலில் சிலைகள் காணாமல் போனது ! ஒரே பரபரப்பு !
புதன்கிழமை அன்று கோவிலில் இருந்து 8 சிலைகள் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் நூறு ஆண்டுகால பழமை வாய்ந்த கோயிலில் எட்டு பழங்கால சிலைகள் திருடப்பட்டுள்ளன.
புதன்கிழமை அன்று கோவிலில் இருந்து 8 சிலைகள் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த 8 சிலைகள் காணாமல் போனது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சைலேஷ் குமார் பாண்டே கூறும்போது "கோவிலில் இருந்து திருடு போன சிலைகள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது முதலில் 9 சிலைகள் திருடு போனதாக நம்பப்பட்டது பிறகு ஒரு சிலை மட்டும் கோவில் வளாகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்" என்று கூறினார்.
நூறு ஆண்டுகால பழமை வாய்ந்த கோவிலில் சிலைகள் காணாமல் போனது, அயோத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Image : Economic Times