2014க்கு பின்னர் மட்டும் UNESCO பாரம்பரிய மையப் பட்டியலில் பத்து இந்திய தளங்கள்! #Dholavira

Update: 2021-07-29 03:00 GMT

உலக பாரம்பரிய மையங்களின் (World Heritage Site) வரிசையில் ஆந்திராவை சேர்ந்த 'ராமப்பா கோவில்' பொறிக்கப்பட்ட சில நாட்களுக்கு பிறகு, தற்பொழுது இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 'தோலவீரா' என்ற குஜராத்தில் உள்ள ஹரப்பா நகரம் தற்பொழுது UNESCOவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, தோலவீராவை உலக பாரம்பரிய சின்னப் பட்டியலுக்கு கடந்த வருடம் ஜனவரியில் வழிமொழிந்தது. இந்த தளம் UNESCOவின் பட்டியலில் இடம்பெறும் என்று 2014 இலிருந்து எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஹரப்பா நகரமான 'தோலவிரா' தெற்காசியாவில் கிமு 3 முதல் இரண்டாம் நூற்றாண்டு வரையிலான நன்கு பாதுகாக்கப்பட்ட நகர்ப்புறங்களில் ஒன்றாகும்.

இதை குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்வீட்டில், "இந்த செய்தியால் முற்றிலும் மகிழ்ச்சி அடைகிறேன். தோலவிரா ஒரு முக்கியமான நகரமாக இருந்தது. இது நமது கடந்த காலத்துடன் நம்மை இணைக்கும் மிக முக்கியமான இணைப்புகளில் ஒன்றாகும். இது வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்பொருளியல் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டியது" என்று தெரிவித்திருந்தார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ருத்ரேஸ்வரர் கோவில் (ராமப்பா கோவில்) இந்தியாவின் 39வது உலக பாரம்பரிய மையமாக மாறிய சில தினங்களுக்கு பிறகு இது தொடர்வது மகிழ்ச்சிகரமான செய்தி ஆகும்.

அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே மத்திய கலாச்சார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்தார். இது குறித்து ரெட்டி வெளியிட்டுள்ள ட்வீட்டில், "தோலவீரா இப்போது இந்தியாவில் 40வது உலக பாரம்பரிய மையமாகும் என்று எனது சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்வது மிகவும் பெருமைக்குரியது" என்று தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் இதனுடன் சேர்த்து மொத்தம் 40 பாரம்பரிய உலக மையங்கள் உள்ளன, இதில் 32 கலாச்சார, ஏழு இயற்கை மற்றும் ஒரு கலப்பு மையம் உள்ளது. 40 அல்லது அதற்கு மேற்பட்ட உலக பாரம்பரிய சின்னங்களை கொண்ட நாடுகளில் இந்தியா தவிர தற்பொழுது இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.

2014 பிறகு இந்தியாவை சேர்ந்த 10 புதிய உலக பாரம்பரிய தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது இந்திய கலாச்சாரம், வாழ்க்கை முறையை மேம்படுத்துவதில் பிரதமரின் உறுதியான அர்ப்பணிப்பு சான்றாகும் என்றும் கலாச்சார அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹரப்பா தளங்களில் இது 6 வது பெரிய நகரமாகும்.


இது ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக செழித்த நகரம். மிகவும் மதிப்பு வாய்ந்த கலைப்பொருட்களும், நன்கு பாதுகாக்கப்பட்ட நகர்புற குடியேற்றம் ஆகியவை இங்கு உள்ளது. இதில் கோட்டையின் கிழக்கு மற்றும் தெற்கில் தொடர்ச்சியான நீர்த்தேக்கங்கள் காணப்படுகின்றன. பொதுவாக ஆறுகள் மற்றும் வற்றாத நீர் ஆதாரங்களுக்கு அருகில் அமைந்துள்ள பிற நகரங்களை போலல்லாமல் இந்த நாகரீகம் மற்றும் அதன் இருப்பிடம் வெவ்வேறு கனிமம் மற்றும் மூலப்பொருட்கள் அருகிலிருந்துள்ளது.

இந்த நகரம் கிட்டத்தட்ட ஆயிரத்து 500 ஆண்டுகளாக செழித்து வளர்ந்தது. இது ஒரு நீண்ட தொடர்ச்சியான வாழ்விடத்தை குறிக்கிறது. 

Tags:    

Similar News