கவுகாத்தி புத்தக திருவிழாவில் அதிக விற்பனை ஆன டிரைவரின் புத்தகம்!

கவுகாத்தி புத்தக திருவிழாவில் அதிக விற்பனை ஆன டிரைவரின் புத்தகம்!

Update: 2021-01-20 18:24 GMT

அசாம் மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக,  டிரைவராக பணியாற்றி வரும் ரூபம் தத்தா, தனது பணியின் போது நிகழ்ந்த அனுபவங்கள் அடங்கிய தொகுப்பினை புத்தகமாக தொகுத்து, கவுகாத்தி புத்தக திருவிழாவில் வெளியிட்டார்.  இவரின் புத்தகம், 20 நாட்களில், 8 ஆயிரம் பிரதிநிதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

புத்தக விற்பனை நிகழ்த்திய சாதனை தொடர்பாக ரூபம் தத்தா கூறியதாவது, மக்கள், டிரைவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், அவர்களை எளிதில் காயப்படுத்தி விடுகின்றனர். ஒவ்வொரு பயணத்தின் போதும், டிரைவர்கள் பெரிய பெரிய சவால்களை எதிர்கொண்டு வருவதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

டிரைவர்கள் பணிநேரங்களில் எப்போதும் முன்னெச்சரிக்கை உணர்வுடனேயே இருக்க வேண்டும். எதிர்பாராதவிதமாக, எதிரே வாகனம்   வந்தால், அந்த தருணத்தை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் முன்கூட்டியே அவர்கள் அறிந்து அதற்கேற்ப தனது வாகனத்தின் வழித்தடத்தை அவர்கள் மாற்றி அமைத்து தங்கள் உயிரை அவர்கள் காத்துக்கொள்வதுடன், அதில் பயணம் செய்யும் பல்லாயிரக் கணக்கானோரின் உயிர்களை காக்க வேண்டிய பொறுப்பு, டிரைவர்களையே சார்ந்தது. 

அந்த பொறுப்புணர்வுடன் ஒவ்வொரு டிரைவரும் நடந்து கொண்டு இருக்கின்றனர். அத்தகைய அரும்பெரும்பணியை செய்யும் டிரைவர்களை மக்கள், ஏளனமாகவே பார்ப்பது எங்களுக்கு மிகவும் மனவருத்தத்தை அளிக்கிறது.

தனது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டதை அடுத்து,  டிரைவர் பணியை தத்தா ராஜினாமா செய்தார். மீதமிருக்கும் வாழ்க்கையை, அமெரிக்காவில் கழிக்க வேண்டும் என்பதே தத்தாவின் ஆசை. 

ஏனெனில், இவருடன் கூடப்பிறந்தவர்கள், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். டிரைவராக பணியாற்றி வரும்போதே, தத்தா சிறிய டிராவல் ஏஜென்சியை நடத்தி வந்தார். பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களை அசாம் மொழியில் எளிமையாகவும், அனைவருக்கும் எளிதில் புரியும்படியாகவும் இந்த புத்தகம் உள்ளதால், ஆன்லைன் வாசகர்கள் இதை பெரிதும் விரும்பி படிக்கின்றனர்.

இந்த புத்தகத்தின் விலை ரூ.300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், எளிய நடையிலான இந்த புத்தகம் பெரும்பாலானோரை தன்பக்கம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Similar News