நாடு முழுவதும் காங்கிரசின் அடித்தளம் மோசமான நிலைக்கு போய்விட்டது - ப.சிதம்பரம் புலம்பல்.!

நாடு முழுவதும் காங்கிரசின் அடித்தளம் மோசமான நிலைக்கு போய்விட்டது - ப.சிதம்பரம் புலம்பல்.!

Update: 2020-11-25 14:21 GMT

பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை இழந்தது. இதில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் பல தொகுதிகளில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் அதிக இடங்களில் தோல்வி அடைந்ததால்தான் அங்கு ஆர்ஜேடி கூட்டணி ஆட்சிக்கு வரமுடியவில்லை என்ற பழி காங்கிரஸ் மேல் விழுந்துள்ளது.  

காங்கிரசின் இந்த படுதோல்விக்கு காங்கிரஸ் காரணம் கட்சி மேலிடம்தான் என கட்சி உயர்நிலை தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது ஏற்கனவே மூத்த தலைவர் கபில்சிபல் மறைமுகமாக குற்றம் சாட்டினார்.  இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடத்துக்கு மிகவும் நெருக்கமான ப.சிதம்பரமும் இப்போது அதேபோன்ற குற்றச்சாட்டை முன்மொழிந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் " பீகாரில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டிருக்க கூடாது, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை காங்கிரஸ் மேலிடம் கேட்டுப் பெறவில்லை, பாஜகவுக்கு அதிக செல்வாக்குள்ள தொகுதிகளில் போட்டியிட்டது தவறு.  அப்படிப்பட்ட தொகுதிகளை காங்கிரஸ் ஏற்று இருக்கக் கூடாது. அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி முடிவுகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

நமது கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கும் நல்ல வாய்ப்பு இருந்தது என்றாலும் வெற்றிக்கு மிக அருகில் வந்து கோட்டையை விட்டுவிட்டோம். பீகாரில் மட்டுமல்லாமல் குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் மோசமாக தோல்வியடைந்துள்ளது. 

இது நாடு முழுவதும் கட்சி அடிப்படை ரீதியாக பலவீனமாக இருப்பதை காட்டுவதாகவும், அதே சமயம் பீகாரில் கம்யூனிஸ்டு கட்சிகள் சிறப்பான வெற்றியை பெற்றுவிட்டன , அந்த கட்சிகளின் அடிமட்ட அமைப்புகள் வலுவாக இருந்ததால் மட்டுமே அவை வெற்றி பெற்றுள்ளன.  இதனால் காங்கிரசுக்கு ஏற்பட்ட மோசமான  ஏற்பட்ட விளைவுகள் குறித்து கட்சி மறு ஆய்வு செய்ய வேண்டிய நேரமிது எனக் கூறி ப.சிதம்பரம் புலம்பியுள்ளார்.  

ஏற்கனவே பீகார் தோல்விக்கும், மற்ற இடைத் தேர்தல் தோல்விகளுக்கும் வாக்கு பதிவு இயந்திரங்களை குறை கூறும் நேரம் இதுவல்ல என்றும் குறைகள் கட்சியின் மீதுதான் என்ற பொருள்பட அவரது மகன் கார்த்திக் சிதமரம் கூறியது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இப்போது அவரது தந்தையும் அதேபோல மேலிடத்தை குறை கூறி புலம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


 

Similar News