எல்லையில் நுழைந்த சீன ராணுவ வீரரை மடக்கி பிடித்த இந்திய ராணுவம்.!

எல்லையில் நுழைந்த சீன ராணுவ வீரரை மடக்கி பிடித்த இந்திய ராணுவம்.!

Update: 2021-01-09 17:56 GMT

லடாக் எல்லையில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய சீன வீரர்களிடையே கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதன் பின்னர் இருந்து இருநாடுகளுக்கும் இடையே ஒரு மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இதனால் இரண்டு நாடுகளும் எல்லைப்பகுதியில் படைகளை குவித்து வைத்துள்ளது. போர் ஏற்படுகின்ற சூழல் நிலவியது. இதன் பின்னர் பேச்சு வார்த்தைக்கு பின்னர் இரு நாடுகளும் சமாதானம் ஆனது.

இந்நிலையில், எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் இந்திய ராணுவத்தின் சிறப்பு படையினரும், விமானப்படையின் சிறப்பு பிரிவினரும் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், லடாக் எல்லையில் உள்ள பான்காங் ஏரி பகுதியில் இந்திய ராணுவத்தினர் நேற்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர் ஒருவர் நுழைவதை இந்திய ராணுவத்தினர் கண்டனர். இதனிடையே எல்லைதாண்டிய சீன வீரரை சுற்றிவளைத்த இந்திய ராணுவத்தினர் அந்த வீரரை கைது செய்தது.

மேலும் பிடிப்பட்ட சீன வீரரிடம் இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னர் சீன ராணுவ வீரர் கூறும்பொழுது, தெரியாமல் இந்திய பகுதியில் நுழைந்து விட்டேன் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் பற்றி சீன உயர் அதிகாரிகளிடம் இந்திய ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News