சீனாவுக்கு மரண பயத்தை காட்டும் இந்திய ராணுவம்: 14,000 அடி உயரத்தில் பாராசூட் வான்வழி பயிற்சி !
கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவம் வான்வழி பயிற்சிகளை அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.;
கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவம் வான்வழி பயிற்சிகளை அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.
கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதிகளில் இந்திய, சீன படைகளுக்கு இடையே தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது. இரண்டு நாடுகளும் இந்தப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், ராணுவத்தின் சதுர்ஜீத் பிரிவு வீரர்கள் 14,000 உயரத்தில் வான்வழியாக பாராசூட் மூலம் தரையிறக்கப்பட்டனர். இவர்கள் சி130 மற்றும் ஏஎன்32 விமானங்கள் மூலமாக 5 வெவ்வேறு இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டு தரையிறக்கப்பட்டனர். இந்த பயிற்சியில் சரியான இலக்கில் தரைறங்கச் செய்வது மற்றும் விரைந்து ஒன்றாக இணைவது உள்ளிட்டவைகளில் ராணுவத்தினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இவர்கள் ஒத்திகையில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணம் சீன ராணுவத்தினருக்கு மரண பயத்தை காட்டுவதற்கும் ஒரு முன்னுதாரணமாகவே பார்க்கப்படுகிறது.
Source, Image Courtesy: ANI