மலையை விலைக்கு வாங்கிய மிஷனரிகள்- யாரையும் செல்ல விடாமல் அக்கிரமம்.!

மலையை விலைக்கு வாங்கிய மிஷனரிகள்- யாரையும் செல்ல விடாமல் அக்கிரமம்.!

Update: 2021-01-09 07:25 GMT

ஆந்திர மாநிலம் குண்டூரில் ஒரு‌ மலையை முற்றிலுமாக ஆக்கிரமித்து சர்ச் கட்டியதோடு அங்கு வருபவர்களுக்காக மலையில் ஏறிச் செல்ல படிகள் மற்றும் மலை மீது ஷாப்பிங் மால் உள்ளிட்டவற்றைக் கட்டி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

குண்டூரு மாவட்டத்தின் யட்லபாடு பகுதியில் ஒரு மலைக் குன்றை ஆக்கிரமித்து கிறிஸ்தவர்கள் சர்ச் கட்டியுள்ளனர். இங்கு சிறிய இந்து கோவில்கள் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சில மாதங்கள் முன்பு வரை அங்கு திருமணங்கள் கூட நடந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். சீதா தேவியின் திருவடிகளைக் கொண்ட கோவில் ஒன்று அமைந்திருந்ததாகவும் கூறியுள்ளனர். ஆனால் தற்போது இந்த மலை முழுவதுமே கிறிஸ்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

 

 

மலை மீது சர்ச் கட்டியவர்கள் தற்போது ஏறிச் செல்ல வசதியாக படிகளும் அமைந்து வருகின்றனர். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றும் கட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. புதிதாக வழிபாட்டுத் தலம் கட்ட வருவாய்த் துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் இவர்கள் யாருடைய அனுமதியும் இல்லாமல் ஷாப்பிங் காம்ப்ளக்சே கட்டுவது உள்ளூர் வாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் தாசில்தாரிடம் அனுமதி இன்றி கட்டுமானம் நடப்பது குறித்து புகார் அளித்ததை அடுத்து தாசில்தார் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்துள்ளார். ஆனால் அதை மதிக்காமல் தொடர்ந்து பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இது பற்றி ஆய்வு செய்யச் சென்ற ஆந்திர பா.ஜ.க பெண் நிர்வாகி யாமினி ஷர்மாவை மலை மேல் செல்ல விடாமல் அங்குள்ளவர்கள் தடுத்துள்ளனர்.

 

 

மேலே இருக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று அவர் கூறிய போது "யார் அப்படி சொன்னது. இங்கு அப்படி எதுவும் இல்லை" என்று கூறி அவரை மேலே செல்ல விடாமல் தடுக்கின்றனர்‌. என்னை மேலே போகக் கூடாது என்று சொல்ல நீங்கள் என்ன உங்கள் பெயரில் மலையை எழுதி வாங்கி இருக்கிறீர்களா என்று கேட்ட போது ஆமாம் எழுதித் தான் வாங்கி இருக்கிறோம் என்று திமிராக பதிலளித்திருக்கின்றனர்.

கோவில் இல்லை சர்ச் மட்டும் தான் இருக்கிறது என்றால் அவரை மேலே செல்ல விடுவதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்றும், மலையையே விலைக்கு வாங்கும் அளவுக்கு ஆந்திராவில் மிஷனரிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது என்றும் பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Similar News