போராட்டக்காரர்களால் 500 கோடி ரூபாய் இழப்பை சந்தித்த தேசிய நெடுஞ்சாலைத் துறை!

போராட்டக்காரர்களால் 500 கோடி ரூபாய் இழப்பை சந்தித்த தேசிய நெடுஞ்சாலைத் துறை!

Update: 2021-01-20 17:00 GMT
கடந்த ஆண்டு மத்திய அரசாங்கம் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்போது அதனால் இந்திய நெடுஞ்சாலை ஆணையம்(NHAI) பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதியில் உள்ள சுங்கத் துறையில் 500 கோடி இழப்பைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அக்டோபர் 5 2020 இல் இருந்து பஞ்சாப் தேசிய சுங்கத்துறையில் முற்றிலுமாக வசூல்கள் நிறுத்தப்பட்டது. ஹரியானாவில் 2020 டிசம்பர் 25 இல் இருந்து மிகவும் குறைவாகவே வசூலிக்கப்பட்டு வருகின்றது. "எங்களுக்குச் சுங்க வரியை வசூலிப்பதை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. வருவாய் குறைவினால் எங்களது தற்போது மற்றும் எதிர்கால திட்டங்களை நேரடியாகப் பாதிப்படையும். டெல்லி முதல் ஜெய்ப்பூர் வரை வாகனங்கள் விரைவாகக் குறைந்து விட்டது. நெடுஞ்சாலைகளில் போராட்டம் நடத்துபவர்களின் தடுப்புகள் மற்றும் அவர்களின் ஆர்ப்பாட்டத்தால் வாகனத்தில் வருபவர்கள் மிகவும் அச்சம் கொள்கின்றனர்," என்று NHAI அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
அக்டோபர் 2020 இல் இருந்து மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் குறிப்பாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்யவும் மற்றும் போக்குவரத்தைத் தாராளமாக்கும் நோக்கம் கொண்ட இந்த மூன்று வேளாண் சட்டங்களை முற்றிலுமாக திரும்பப் பெறவே அவர் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 
மேலும் போராட்டக்காரர்கள் டெல்லிக்குச் செல்லும் எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்துகின்றனர். மேலும் இந்த விவசாய மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் 70,000 கோடிக்கு மேல் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று PHDCCI மதிப்பீடு செய்துள்ளது. இருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் முடிவில் விடாப்பிடியாக இருந்துகொண்டு 2024 வரை போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவிக்கின்றனர். 

Similar News