முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் செயல்படும் பொங்கைகாவ்ன் சுத்திகரிப்பு ஆலை - நாட்டுக்கு அர்பணிக்கும் பிரதமர்!

முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் செயல்படும் பொங்கைகாவ்ன் சுத்திகரிப்பு ஆலை - நாட்டுக்கு அர்பணிக்கும் பிரதமர்!

Update: 2021-02-21 08:45 GMT

அசாம் மாநிலத்தில் முக்கியமான எண்ணெய், எரிவாயு திட்டங்களை  பிப்ரவரி 22 (இன்று) பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்தியன் ஆயில் பொங்கைகாவ்ன் சுத்திகரிப்பு ஆலையில் இந்த்மாக்ஸ் யூனிட், மதுபானில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் செகண்டரி டேங்க் ஃபார்ம் மற்றும் டின்சுக்கியாவில் மாகுமிலுள்ள ஹெபடா கிராமத்திலுள்ள கேஸ் கம்ப்ரசர் நிலையம் ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

பிரதமரின் தொலை நோக்குப் பார்வையான 'பூர்வோதயா' திட்டத்திற்கு ஏற்ப அமைந்துள்ள இந்தத் திட்டங்கள் கிழக்கு இந்தியாவில் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பொங்கைகாவ்ன் சுத்திகரிப்பு ஆலையின் இந்த்மாக்ஸ் யூனிட் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்ட உள்நாட்டு தொழில்நுட்பத்தில் செயல்படுவதாகும். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் அதிக அளவிலான எல்பிஜி மற்றும் அதிக ஆக்டேன் காசலின் பெற முடியும்.

இந்த யூனிட் இயங்குவதன் மூலம் ரிஃபைனரியின் கச்சா எண்ணெய் பதப்படுத்தும் திறன் 2.35 எம் எம் டி பி ஏ (ஆண்டொன்றுக்கு மில்லியன் மெட்ரிக் டன்) என்ற அளவிலிருந்து 2.7 எம் எம் டி பி ஏ வாக அதிகரிக்கும். இது இயக்கப்படுவதால் எல்பிஜி உற்பத்தி 50 டி எம் டி (ஆயிரம் மெட்ரிக் டன்கள்) என்ற அளவிலிருந்து 257 டிஎம்டி அளவிற்கு அதிகரிக்கும். மோட்டார் ஸ்பிரிட் (பெட்ரோல்) உற்பத்தி 210 டி எம் டி என்ற அளவிலிருந்து 533 டிஎம்டி யாக அதிகரிக்கும்.

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் செகண்டரி டேங்க் ஃபார்ம், சுமார் 40,000 கிலோ லிட்டர் கச்சா எண்ணெய்யை சேகரித்து வைக்கவும், வெட் குரூட் ஆயிலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஃபார்மேஷன் வாட்டர் ஆகியவற்றுக்காகவும் கட்டப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 10,000 கிலோ லிட்டர் இயக்கத் திறன் கொண்ட டி ஹைடிரேசன் யூனிட்டும் இந்த 490 கோடி ரூபாய் செலவிலான திட்டத்தில் உள்ளது.

டின்சுக்கியாவில் உள்ள மாகுமில்  கேஸ் கம்ப்ரஸர் நிலையம் அமைக்கப்படுவதையடுத்து நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தித்திறன் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 16 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அதிகரிக்கும். 132 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்நிலையம் 3 குறைந்த காற்றழுத்த பூஸ்டர் கம்ப்ரஸர்கள் மற்றும் மூன்று உயர்ந்த காற்றழுத்த லிஃபட்டர் கம்ப்ரஸர்கள் கொண்டதாகும்.

Similar News