இந்துக்கள் இல்லாமல் இந்தியா இல்லை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு!
இந்துக்கள் இல்லாமல் இந்தியா இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். மேலும், இந்தியாவையும், இந்துக்களையும் பிரிக்க முடியாது என்றார்.
இந்துக்கள் இல்லாமல் இந்தியா இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். மேலும், இந்தியாவையும், இந்துக்களையும் பிரிக்க முடியாது என்றார்.
மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: இந்துக்கள் இல்லாமல் இந்தியா இல்லை, இந்தியா இல்லாமல் இந்துக்களும் இல்லை. இந்தியாவையும், இந்துக்களையும் பிரிக்கவே முடியாது.
மேலும், இந்தியா என்பது சுயமாக நிற்கிறது, இதுதான் இந்துத்துவாவின் சாரம்சம் ஆகும். இந்தக் காரணத்துக்காகத்தான் இந்தியா எப்போதும் இந்துக்களின் தேசமாக விளங்கி வருகிறது. சுதந்திரத்தின்போது இந்தியா உடைந்து பாகிஸ்தான் என்ற ஒரு நாடு உருவாகியது. அப்போது தேசப்பிரிவினையால் இந்தியா பாதிக்கப்பட்டதை நாம் மறந்துவிடக் கூடாது. இது போன்ற பிரிவினைகள் நடைபெறாமல் இருந்திருந்தால் இந்த வலி போயிருக்கும். நாம் அனைவரும் இந்துக்கள் என்ற சிந்தனையை மறந்ததால்தான் இந்த தேசம் பிரிந்தது. இவ்வாறு அவர் பேசினார்.
Source: Dinamalar
Image Courtesy:The Quint