மூன்றாம் அலையால் குழந்தைகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை: ஆய்வு முடிவு !
மூன்றாவது அலையால் குழந்தைகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று ஆய்வு முடிவு தகவலை கூறுகிறது.
இந்தியாவில் பரவலாக ஏற்கனவே கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால், அதில் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்றும் பரவலாக கூறப்பட்டு வந்தது. ஆனால் இது பல மருத்துவ நிபுணர்களும் ஆதரிக்கவில்லை. இத்தகைய ஒரு நிலையில் தற்போது சண்டிகரில் நடத்தப்பட்ட ஆய்வில் 71% குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு நோய்த்தொற்று காரணமாக எந்த பிரச்சினையும் ஏற்படாது என்று அவர்கள் முடிவு கூறியுள்ளார்கள்.
இந்தியாவில் வரும் அக்டோபரில் மூன்றாவது அலை உச்சம் தொடலாம் என்று ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகம் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் பிரதமர் அலுவலகத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது. இதுவரை தடுப்பூசித் திட்டத்தில் குழந்தைகள் சேர்க்கப்படாததால், 3வது அலையில் குழந்தைகளுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்து பல்வேறு வகையில் ஆராய்ந்து வருவதாக நிபுணர் குழுவும் கூறியுள்ளது. இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் தற்போது சண்டிகரின் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய செரோ ஆய்வில், 71% குழந்தைகளின் மாதிரிகளில் ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு திறன் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக இதன் இயக்குநர் டாக்டர் ஜெகத் ராம் கூறுகையில், "மூன்றாவது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம். குழந்தைகளுக்கு இன்னமும் தடுப்பூசிகள் போடப்படவில்லை. எனவே தொற்றால் குழந்தைகளுக்கு பாதிப்பு இருக்குமா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் குழந்தைகளுக்கு அதிக அளவில் நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது. அவர்கள் இடம் 71 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. எனவேதான் 3வது அலை குழந்தைகளை அதிகமாக பாதிக்காது" என்று அவர் கூறியுள்ளார்.
Input & image courtesy: Timesnownews