ஜம்மு காஷ்மீர் மக்களை ஒதுக்கி வைக்கும் காலம் முடிந்து போச்சி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று ஜம்மு பகவதி நகர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Update: 2021-10-24 13:00 GMT

ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று ஜம்மு பகவதி நகர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசியதாவது: ஜம்மு மக்களை ஓரங்கட்டிய காலம் முடிவுக்கு வந்துவிட்டது. ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியில் யாராலும் தடைகளை உருவாக்க முடியாது. ஜம்மு யூனியன் பிரதேசத்திற்கு ஏற்கனவே ரூ.12,000 கோடி முதலீடு வந்துள்ளது. 2022ம் ஆண்டு இறுதியில் இந்த முதலீட்டை ரூ.51,000 கோடியாக உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

மேலும், ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதையில் இளைஞர்கள் இணைந்தால், பயங்கரவாதிகள் தங்கள் கட்டமைப்பில் தோல்வி அடைவார்கள். வன்முறையில் பொதுமக்கள் யாரும் கொல்லப்படக்கூடாது என்பதே அரசுடைய நோக்கம். மாநிலத்தில் இருந்து பயங்கரவாதம் வேறோடு அழிக்கப்படுகிறது. சிலர் மாநில வளர்ச்சியை சீர்குலைக்க முயல்கிறார்கள். ஆனால் யாராலும் சீர்குலைக்க முடியாது என்பதை நான் இங்கு உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News