திருப்பதி கோயிலில் 15 ஊழியர்கள் கொரோனா தொற்றால் உயிரிழப்பு.!

காய்ச்சல் மற்றும் சளி உள்ள பக்தர்கள் கோயில்களுக்கு வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.

Update: 2021-05-01 07:54 GMT

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் ஊழியர்களில் 15 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




 


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க பல்வேறு மாநிலங்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதே போன்று மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, சாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.




 


அதன்படி காய்ச்சல் மற்றும் சளி உள்ள பக்தர்கள் கோயில்களுக்கு வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், திருப்பதியில் தடுப்பூசி போடும் பணிகள் ஒரு புறம் நடைபெற்று வருகிறது. அதன்படி 3 ஆயிரம் ஊழியர்களுக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது.

Similar News