திருப்பதி ஒரே நாளில் 6 கோடி 31 லட்சம் உண்டியல் காணிக்கை - வரலாற்று சாதனை!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் மட்டும் ரூபாய் 6 கோடியே 31 லட்சம் உண்டியல் வசூலாகி சாதனை படைத்துள்ளது.

Update: 2022-10-27 02:31 GMT

வரலாற்று சாதனை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 23ம் தேதி அன்று ஒரு நாள் உண்டியல் வருமானமாக ரூபாய் 6 கோடியே 31 லட்சம் வசூலாகி இருப்பதாக தேவஸ்தானம் செய்தியை வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை அன்று சாமி தரிசனம் செய்வதற்காக 23ஆம் தேதி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி திருமலையில் குவிந்தார்கள். பக்தர்களுக்கு என்றுமே பஞ்சம் இல்லாததுதான் திருப்பதி ஏழுமலையான் கோவில்.


ஆனால் இந்த முறை ஒரே நாளில் மட்டும் சுமார் 80 ஆயிரத்து 565 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தார்கள். 31,608 பக்தர்கள் முடி தலைமுடி காணிக்கை செலுத்தினார்கள். மேலும் அன்று ஒரு நாள் மட்டும் உண்டியல் வருமானமாக சுமார் 6 கோடி 31 லட்சம் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தகவல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வரலாற்றில் சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு வரை ஒரே நாளில் அதிகபட்சமாக 6 கோடி 12 லட்சம் தான் உண்டியல் வருமானமாக வசூலாகி இருந்தது.


முந்திய சாதனை முறியடிப்பு:

அந்த ஒரு சாதனையை இது முறியடித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் நேற்று முன்தினம் இரவு 69 ஆயிரத்து 278 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தார்கள். 17,600 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினார்கள். அன்று ஒரு நாள் மட்டும் உண்டியல் வருமானமாக 4 கோடியே 15 லட்சம் கிடைத்துள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News