'தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம்': மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்.!

தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து சில தெளிவான விஷயங்களை முன்வைக்கப்பட்டது. அதில் நீட் தேர்வை ஏற்கமுடியாது என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Update: 2021-04-10 11:18 GMT

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய கூட்டத்தில் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதனை 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பில் சேரமுடியும்.




 


இந்நிலையில், அனைத்து மாநில சுகாதரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று காணொலி வாயிலாக நீட் தேர்வு குறித்த கூட்டத்தை நடத்தினர். அப்போது அந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு, சாந்தி மலர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து சில தெளிவான விஷயங்களை முன்வைக்கப்பட்டது. அதில் நீட் தேர்வை ஏற்கமுடியாது என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.




 


அதேபோல் தமிழக அரசு கொண்டு வந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு தொடரும். மேலும், பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வாய்ப்பில்லை என்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசினர்.

Similar News