ஒற்றுமை சிலையை காண்பதற்கு.. 8 ரயில்களை துவக்கி வைத்த பிரதமர் மோடி.!

ஒற்றுமை சிலையை காண்பதற்கு.. 8 ரயில்களை துவக்கி வைத்த பிரதமர் மோடி.!

Update: 2021-01-17 16:39 GMT

குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டம் கேவடியா பகுதியில் நர்மதை ஆற்றங்கரையில் மறைந்த முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘ஒற்றுமை சிலை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சிலை இந்திய அளவில் மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது. 

இந்நிலையில், சுற்றுலாவை மேம்படுத்துகின்ற வகையில் கேவடியா பகுதியுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில், 8 புதிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களின் சேவையை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக கொடியசைத்து துவக்கி வைத்தார். 

குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று ரயில்கள் இயக்கப்படும் மற்ற பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று ரயில் சேவையை துவக்கி வைத்தனர்.

அதே போன்று சென்னையில் இருந்தும் ரயில் இயக்கப்படுகிறது. இனிமேல் வருகின்ற காலத்தில் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் ஒற்றுமை சிலையை கண்டு ரசித்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News