வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறுவது ஏன்: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விளக்கம்!

மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். குருநானக் ஜெயந்தியையொட்டி மற்றும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் 3 வேளாண் சட்டங்கள் திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

Update: 2021-11-19 12:38 GMT

மேலும், எதற்காக 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது என்று விளக்கம் அளிக்கையில், வேளாண் சட்டத்தின் நலனை ஒரு பிரிவை சேர்ந்த விவசாயிகளுக்கு எங்களால் விளக்கமாக புரியவைக்க முடியவில்லை. பல்வேறு வகையில் நாங்கள் முயற்சி செய்தும் அந்த சட்டத்தை விளக்குவதில் வெற்றிபெற முடியவில்லை. இது எங்களுடைய தவறு என்று கருதுகிறேன். இந்த சட்ட விவகாரத்தில் நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

ஆனால், வேளாண் துறைக்கு என்று புதிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு குழு அமைக்கப்படும. அந்த குழுவில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள், பல்வேறு வகையிலான அதிகாரிகள் இணைந்து விவசாயத்திற்காக போராடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Daily Thanthi

Image Courtesy: ANI

Tags:    

Similar News