நீட் தேர்வு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும் !

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

Update: 2021-08-10 06:24 GMT

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வுக்கு விண்ணபிக்க இன்றே கடைசி நாளாகும்.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில், 2021, 22 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகின்ற செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து ஆன்லைனில் கடந்த ஜூலை 13ம் தேதி முதல் தொடங்கியது. இதனிடையே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பு இன்று 10ம் தேதிக்கு மேல் நீட்டிக்க வாய்ப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.

Source: Dinamani

Image Courtesy: Ndtv

https://www.dinamani.com/tamilnadu/2021/aug/10/today-is-the-last-day-to-apply-for-need-skin-3677324.html

Tags:    

Similar News