ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் இவ்வளவு கோடி பரிசா? இந்திய ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு!
Cash prize worth for medalist
ஜப்பானின் தலைநகரங்கள் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் சார்பாகவும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அத்தகையவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக தற்போது இந்திய ரயில்வே துறை ஒரு அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு என்னவென்றால், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்பவருக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட வீரர்களில் 25 பேர் ரயில்வே துறை ஊழியர்கள். ரயில்வே துறை சார்பாக பங்கேற்கும் வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பதக்கம் வென்றால் பரிசுத்தொகை வழங்கப்படும் என இந்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே துறையை சார்ந்த விளையாட்டு வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றால் அவர்களுக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இதுபற்றி வெளியான அறிவிப்பில், விளையாட்டு வீரர்களின் கனவான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களில் ரெயில்வே துறையை சார்ந்தவர்கள் தங்கம் வென்றால் ரூ.3 கோடி, வெள்ளி வென்றால் ரூ.2 கோடி, வெண்கலத்திற்கு ரூ.1 கோடி என்ற அளவில் பரிசு தொகை அளிக்க இருக்கிறோம். போட்டியில் இறுதிச்சுற்று வரை செல்லும் வீரர்களுக்கு ரூ.35 லட்சம், போட்டியில் கலந்து கொண்டாலே ரூ.7.5 லட்சம் வழங்கப்படும் என்றும் தங்கப்பதக்கம் வென்ற வீரரின் பயிற்சியாளருக்கு ரூ.25 லட்சம், வெள்ளிப்பதக்கம் வென்றவரின் பயிற்சியாளருக்கு ரூ.20 லட்சம் மற்றும் வெண்கலப்பதக்கம் பெற்றவரின் பயிற்சியாளருக்கு ரூ.15 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது.
Image courtesy: odishatv