பயணிகளின் நடத்தை கண்காணிப்பு.. பேருந்து நடத்துனர் சட்டையில் கேமரா பொருத்தம்..!

பயணிகளின் நடத்தை கண்காணிப்பு.. பேருந்து நடத்துனர் சட்டையில் கேமரா பொருத்தம்..!

Update: 2020-12-07 15:31 GMT

நாடு முழுவதும் அதிகமான மக்கள் பேருந்து பயணங்களை பயன்படுத்தி வருகின்றனர். அது போன்ற சமயங்களில் பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. சில நேரங்களில் திருட்டு சம்பவங்களும் பேருந்தில் அரங்கேறுகிறது. இது போன்றவைகள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்காக மகாராஷ்டிரா அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.


இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகர பேருந்துகளில், பயணியரின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நடத்துனரின் சட்டையில் கேமரா பொருத்த ஆய்வு நடந்து வருகிறது.

மஹாராஷ்டிராவில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அவுரங்காபாத் நகராட்சி, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறது.


இதன் ஒரு பகுதியாக, அவுரங்காபாத் ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு கழகம் சார்பில், நகரில் 100 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், மஹாராஷ்டிரா சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

சமீபத்தில், பெண் நடத்துனர்களிடம் சில பயணியர் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து பயணியரின் நடத்தையை கண்காணிக்க அவுரங்காபாத் ஸ்மார் சிட்டி மேம்பாட்டு கழகம் முடிவு செய்துள்ளது.


இதற்காக, நடத்துனரின் சட்டை பையில், கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, டிக்கெட் வினியோகம் மற்றும் பயணியரின் நடவடிக்கைகள் கண்காணிக்க வசதியாக இருக்கும் என்று போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Similar News