உலக மொழியில் இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தை கொண்டு செல்வோம் - பிரதமர் மோடி உறுதி!

இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தையும், உலகம் புரிந்து கொள்ளும் மொழியில் பிரபலப்படுத்துவது அவசியம் என பிரதமர் வலியுறுத்தினார்

Update: 2023-02-13 01:15 GMT

இந்தியா தற்பொழுது யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இந்தியாவில் தோன்றிய யோகா உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஒரு நோக்கில் பிரதமரின் முக்கிய நிகழ்ச்சியின் காரணமாக யோகா தினம் உலக அரங்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களும் யோகா தினத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாவாக எடுத்து கொண்டாடி வருகிறார்கள்.


யோகா மற்றும் இந்திய மருத்துவ முறைகள் குறித்து உலக அளவில் நாம் எடுத்துச் செல்வதன் மூலமாக இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் உயர்த்த முடியும் என்று நம்பிக்கை பல்வேறு மக்கள் வைத்திருக்கிறார்கள் ஏனெனில் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. இதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் குடிமகன் ஒருவர் ட்விட்டர் பதிவிற்கு தற்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பதில் அளித்து இருக்கிறார்.


யோகக்கலையை பலவழிகளில் ஆய்வு செய்து, பிரபலப்படுத்துவது அவசியமானது என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். குடிமக்களில் ஒருவரது டுவிட்டருக்கு பதிலளித்து, பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "உலக மக்களுக்குப் புரியும் மொழியில், யோகக் கலையையும், இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தையும் பிரபலப்படுத்த வேண்டும் என மிகச் சரியாகக் கூறினீர்கள். மக்கள் மத்தியிலும் இப்படியொரு சிறப்பான விழிப்புணர்வு இருப்பதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்".

Input & Image courtesy: News

Tags:    

Similar News