துறவி தற்கொலையில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்! - உ.பி. முதலமைச்சர் பேட்டி!

ஏபிஏபி என்ற துறவியர் அமைப்பின் தலைவர் மகந்த் நரேந்திரகிரி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-09-21 11:23 GMT

ஏபிஏபி என்ற துறவியர் அமைப்பின் தலைவர் மகந்த் நரேந்திரகிரி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் அகில பாரதிய அகரா பரிஷத் (ஏபிஏபி) என்ற துறவியர் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக மகந்த் நரேந்திர கிரி நேற்று (செப்டம்பர் 20) மடத்திற்குள் இறந்த நிலையில் கிடந்தார். இந்த சம்பவம் அந்த மடத்தில் உள்ளவர்களை மட்டுமின்றி மாநிலத்தில் உள்ள துறவிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே துறவி நரேந்திர கிரி தற்கொலைக்கு முன்னர் எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதில் சில சீடர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மடத்தின் சீடர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், துறவி மரணத்தில் சமாஜ்வாதி கட்சி பிரமுகர் ஒருவரும் தொடர்பு இருப்பதாக செய்தியகள் வெளிவருகின்றது.


இந்நிலையில், மகந்த் நரேந்திர கிரியின் உடலுக்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி அதித்யநாத் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், ஏடிஜி, ஐஜி, டிஐஜி, உள்ளிட்ட அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். துறவியின் பிரேத பரிசோதனை நாளை முடிவடையும். அந்த அறிக்கைக்காக காத்திருக்கிறோம். குற்றவாளிகள் நிச்சயம் தண்டனை கிடைக்கும் எனக் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News