மத்திய அரசு விதிமுறைகளுக்கு பணிந்த ட்விட்டர் நிறுவனம்.!

மத்திய அரசு கொண்டு வந்த டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகளை ஏற்றுக்கொள்வதாக ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. ட்விட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலர் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கிலும் செயல்பட்டு வந்தனர்.

Update: 2021-06-02 06:50 GMT

இதனால் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு புதிய உத்தரவுகளை பிறப்பித்தது. இதற்கு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளம் ஒத்துக்கொண்டு விட்டது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் முரண்டு பிடித்து வந்தது.

இந்நிலையில், புதிய சட்டங்களின்படி இந்தியாவில் எழும் புகார்களை கவனித்து நடவடிக்கை எடுப்பதற்காக இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரியாக தர்மேந்திர சதுர் என்பவரையும் டிவிட்டர் நிறுவனம் நியமித்துள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்குதல் மற்றும் புகார்களை கையாளுவது உள்ளிட்ட மத்திய அரசின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவற்றுக்கு அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்று புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. விரைவில் அவர்களையும் ட்விட்டர் நிறுவனம் நியமனம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News