பசுமை விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - சொல்லி அடிக்கும் மோடி அரசு!
2019 ஆம் ஆண்டு முதல் 6 பசுமை விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மத்திய அரசு 2008 ஆம் ஆண்டு பசுமை விமான நிலையக் கொள்கையை வகுத்தது. நாடு முழுவதும் பசுமை விமான நிலையங்களை கட்டமைப்பதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள், நடைமுறைகள் மற்றும் நடவடிக்கைகளை அந்தக் கொள்கை வகுத்துள்ளது. இந்தக் கொள்கையின்கீழ், விமான நிலையத்தை உருவாக்குபவர் அல்லது சம்பந்தப்பட்ட மாநில அரசின் விருப்பம் ஆகியவை இதற்கு அவசியமாகும். இதுகுறித்த கருத்துரு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு அனுப்பப்பட வேண்டும். இதற்கான ஒப்புதல்கள் பெறப்பட வேண்டும்.
2019 ஆம் ஆண்டு முதல் ஆறு பசுமை விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அவை கலபுரக்கி திட்டச் செலவு ரூ.175.57 கோடி, ஒர்வாக்கல் திட்டச்செலவு ரூ.187 கோடி, சிந்து துர்க் திட்டச் செலவு ரூ.520 கோடி, இட்டா நகர் திட்டச்செலவு ரூ.646 கோடி, குஷி நகர் திட்டச்செலவு ரூ.448 கோடி, மோபா திட்டச்செலவு ரூ.2,870 கோடி ஆகும். இவற்றில் குஷிநகர், மோபா ஆகியவை சர்வதேச விமான நிலையங்களாகும்.
பசுமை விமான நிலையக் கொள்கையின்கீழ், மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் என்னுமிடத்தில் பசுமை விமான நிலையத்தை அமைக்க கொள்கையளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் முதற்கட்ட அனுமதியை வழங்கியுள்ளது. குவாலியர் ரேவா ஜபல்பூர் ஆகிய விமான நிலையங்களை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Input & Image courtesy: News