"மோடிதான் நம் தலைவர், பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள்": பீகாரில் திடீர் U-turn அடித்த பாஸ்வான் மகன்!

"மோடிதான் நம் தலைவர், பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள்": பீகாரில் திடீர் U-turn அடித்த பாஸ்வான் மகன்!

Update: 2020-10-27 08:07 GMT

பீகார் சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது. நடைபெறவிருக்கும் இந்த தேர்தலில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் பிரதான எதிர்க்கட்சியான லாலு கட்சி மற்றும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகாகத்பந்தனுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

இத்தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் நிதிஷ்குமார் தலைமையிலான அணி மீண்டும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன.

ஆனால் நிதிஷ்குமார் செல்வாக்கு சரிந்திருப்பதாகவும், அதே நேரத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்திருப்பதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் நிதிஷ்குமாருக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு குறைந்து வருவதாகவும் செய்திகள் வந்தன.

மதுவுக்கு தடை விதித்துவிட்டு கள்ளச்சாராயததை நிதிஷ் அரசு ஊக்குவிப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அவரது கட்சியினர் ஏகபோக சாராய வியாபாரிகளாக மாறிவிட்டார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எப்போதும் இல்லாத அளவில் இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு நிதிஷ்குமார் அரசு மற்றும் அரசு அதிகாரிகள் இப்போது ஆளாகி இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இன்னிலையில் கட்சிக்காரர்கள் மற்றும் அமைச்சர்கள் என 10 பேர் மீது நிதிஷ்குமார் கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

மறைந்த மத்திய அமைச்சர் மகனும் லோகசக்தி கட்சி தலைவருமான சிராக் பாஸ்வான் தொகுதி ஒதுக்கீட்டு பிரச்சினையில் பாஜக கூட்டணிக்கு எதிராக தனியாக களம் இறங்கினார்.

பிரச்சாரத்தில் அவர் பேசுகையில் " நிதிஷ் இல்லாத அரசை உருவாக்க விரும்புகிறோம். பீகார் முதன்மை மாநிலமாக வரவேண்டும் எனில் லோக் ஜனசக்தி வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கூறிய அவர் என் தலைவர் நரேந்திரமோடிதான் என்று கூறி பிரச்சாரம் செய்து வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.  

பாஜக போட்டியிடும் இடங்களில் அந்த கட்சிக்கு வாக்களியுங்கள், ஆனால் கள்ளச்சாராயம் விற்பனைக்கு காரணமான நிதிஷ் குமார் கட்சிக்கும், அவருக்கும் வாக்களிக்கதீர்கள் என அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் காங்கிரஸ் லாலுகட்சியான ராஷ்ட்ரீய ஜனதாதளம் சார்பில் நடைபெற்ற ராகுல்காந்தியின் பிரச்சாரமும் மக்களின் கவனத்தைக் கவர்ந்தது.

அவர் மோடியின் பேச்சுக்கு பதிலடி அளித்து பேசினார். லாலு மகன் தேஜஸ்வி ராகுல் காந்தி செல்லும் இடங்களுக்கு துணையாக சென்றார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது அவர்களின் பிரதான வாக்குறுதியாக இருந்தது.

அதே சமயம் இந்த முறை சிறிய அளவிலான வட்டாரக் கட்சிகள், புதிய இளைஞர்கள் வெற்றி பெற வாய்ப்புண்டு எனவும் கூறப்படுகிறது.

என்றாலும் பிரதமர் நரேந்திரமோடி அலை இன்னும் அங்கு வீசுவதாகவும், கொரோனாவுக்குப் பிறகு அந்த கட்சிக்கு மேலும் மவுசு கூடியுள்ளதாகவும் மாநில பாஜகவினர் கூறுகின்றனர்.

இதற்கு காரணம் மத்திய அரசின் நலத்திட்டங்கள், கொரோனா நிவாரணம், புதிய திட்டங்களை மாநில பாஜகவினர் மற்றும் நிதிஷ் கூட்டணியில் உள்ள பாஜக அமைச்சர்கள் திறமையாக கையாண்டனர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் மோடி 2 வது முறையாக பிரதமரான பிறகு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கியது, ராமர் கோவில் பிரச்சினை தீர்வு, முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்தது, சீனாவுடன் பிரச்சினையில் இந்தியாவின் அணுகுமுறைகள் போன்றவை குறித்து பாஜகவினர் சமூக ஊடகங்கள் வழியாக நவீன பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர்.

இது பீகார் மக்களிடையே ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறப்படுகிறது.

இதற்கு முன்பாக நிதீஷ் குமார் எப்போதும் மோடியுடன் ஒரே மேடையில் தோன்றுவதற்கு சங்கடப்படுவார். அதனால் எங்கே சிறுபான்மையினர் வாக்கு வராமல் போய் விடுமோ என பயப்படுவாராம்.

ஆனால் இந்த தேர்தலில் தன் நிலைமையை தெரிந்து கொண்ட நிதிஷ்குமார் பிரதமரை தங்கள் கட்சி தொகுதிகளில் குறிப்பாக தனது தொகுதியில் பிரச்சாரம் செய்ய வலியுறுத்தி அழைத்தார் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி 12 சுற்று சூறாவெளிப் பிரச்சாரத்துக்கு அங்கு திட்டமிட்டு இறுதி கட்ட பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இந்த கூட்டங்களில் நிதிஷ் குமாரை விட்டுக் கொடுக்காமல் பிரதமர் பெருந்தன்மையுடன் பேசியுள்ளாராம். நிதிஷ் எங்கள் நெருங்கியகூட்டாளி, பீகாருக்கு நாங்கள் இணைந்து ஏற்கனவே நிறைய செய்துள்ளோம், இன்னும் செய்ய வேண்டியுள்ளது நிறைய உள்ளது என்று கூறினாராம்.

ஆனால் மக்கள் எடுக்கப்போகும் முடிவு பாஜக நிற்கும் பல தொகுதிகளில் சாதகமாக இருக்கும் என செய்திகள் வந்தாலும் கூட்டணி வெற்றி பற்றி போகப்போகத் தெரியும் எனக் கூறப்படுகிறது.

Similar News