உள்நாட்டு பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாதுகாப்புப்படை, காவல்துறையுடன் முக்கிய ஆலோசனை!
உள்நாட்டு பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநில காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்புப்படை தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
உள்நாட்டு பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநில காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்புப்படை தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாதுகாப்பு குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். உள்நாட்டு பாதுகாப்பில் எதிர்கொண்டுள்ள சவால்கள் பற்றியும் அவற்றை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். காஷ்மீரில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்துவது பற்றியும் ஆலோசனையில் பேசப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெளிமாநிலங்களை சேர்ந்த அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் கொன்று வருவது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காஷ்மீரில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதுகாப்புப்படை மற்றும் போலீசார் பயங்கரவாதிகளை அழிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Puthiyathalaimurai