புல்வாமா: சி.ஆர்.பி.எப்., முகாமில் இரவு தங்கி வீரர்களுடன் உணவருந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

மூன்று நாள் அரசு முறை பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புல்வாமாவில் உள்ள சி.ஆர்.பி.எப்., முகாமில் நேற்று (அக்டோபர் 25) இரவு தங்கி அவர்களுடன் உணவருந்தி அவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.

Update: 2021-10-26 02:04 GMT

மூன்று நாள் அரசு முறை பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புல்வாமாவில் உள்ள சி.ஆர்.பி.எப்., முகாமில் நேற்று (அக்டோபர் 25) இரவு தங்கி அவர்களுடன் உணவருந்தி அவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார். மேலும், ஜம்முவில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு பிரச்சனைகளையும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் வீரர்கள் மத்தியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் பயணத்திலேயே சி.ஆர்.பி.எப்., முகாமுக்கு வந்ததுதான் மிக முக்கிய நிகழ்ச்சி என்றார். இன்றை இரவு உங்களுடன் தங்கி பிரச்சனையை புரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.

இதனையடுத்து அவர்களுடன் இரவு உணவை அருந்திய அமித்ஷா வீரர்களுடன் கலந்துரையாடினார். துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வீரர்கள் காண்பித்து விளக்கினர். அங்கேயே இரவு தங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: ANI

Tags:    

Similar News