பருவநிலை மாறுபாடு சவால்களை முறியடிக்கும் முயற்சி: G20 நாடுகள் ஒருங்கிணைக்கும் இந்தியா!

உலக வெப்பமயமாதல் எதிராக G20 நாடுகள் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும் என மத்திய அமைச்சர் அழைப்பு.

Update: 2023-02-07 03:31 GMT

புதுதில்லியில் பிப்ரவரி 05 2023 அன்று உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாடு சவால்களை முறியடிக்கும் முயற்சியில் G20 நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இன்று துவங்கிய முதல் மின்பகிர்மானப் பணிக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், 2005 முதல் 2030ம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வு தீவிரத்தை 45 சதவீதமாகக் குறைக்க இந்தியா உறுதிபூண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.


2030ம் ஆண்டிற்குள், நாட்டின் 50 சதவீத மின் உற்பத்தித்திறனை, புதைப்படிவமற்ற எரிபொருள் அடிப்படையிலான எரிசக்தி மூலம் பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். பருவநிலை மாறுபாடு குறித்த செயல் குறியீட்டில், இந்தியா தற்போது முதல் 5 நாடுகளுக்குள் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசின் பல்வேறு எரிசக்தி சேமிப்புத் திட்டங்கள் வாயிலாக, நாட்டின் கார்பன் உமிழ்வு ஆண்டுக்கு 267.9 மில்லியன் டன்னாக இருப்பதாகவும் கூறினார்.


இதன்மூலம், 18.5 பில்லியன் டாலர் நிதி சேமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு. ஆர்.கே. சிங், தற்போது நடைமுறையில் கொண்டுள்ள எரிசக்தி தளத்தை இந்தியா எவ்விதத்திலும் சமரசம் செய்துகொள்ளாது என்றும், எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து வளங்களையும் ஆராயும் என்றும் குறிப்பிட்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News