உத்தர பிரதேசத்தில் அரங்கேறிய கட்டாயம் மதமாற்றம் - 9 நபர்கள் கைது!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட்டில் கிறிஸ்துவ மதத்திற்கு மாற கட்டாய மதமாற்றத்திற்கு ஈடுபடுத்திய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

Update: 2022-11-01 03:57 GMT

உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட்டில் குடிசை பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் இந்த நோய் தொற்றின் காரணமாக அவர்களுடைய ஏழ்மை நிலையில் பயன்படுத்தி அவர்களுக்கு பண உதவிகளை செய்து வலுக்கட்டாயமாக அவர்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் காரணமாக இது பற்றி போலீசாரில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பெயரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


உத்திரபிரதேச மாநிலத்தில் மீரட் நகர் குடிசை பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அன்றாட கூலிகள் மற்றும் தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்து தங்களுடைய பிழைப்புகளை நடத்தி வருகின்றார்கள். இவர்களுடைய ஏழ்மை நிலையை பயன்படுத்தி அங்கு வந்த சில பணக்காரர்கள் அவர்களை கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தி இருக்கிறார்கள் என்பது தெரிய வந்து இருக்கிறது. அவர்களுக்கு உதவி செய்த பிறகு, அந்த நபர்கள் உலகில் இயேசு கிறிஸ்து மட்டுமே ஒரே கடவுள்., நீங்கள் அனைவரும் தேவாலயம் சென்று இயேசுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.


இது குறித்து குடிசை பகுதிகளில் வசித்த நபர் ஒருவர் கூறுகையில், அவர்கள் ஆதார் கார்டில் உள்ள எங்கள் பெயரை மாற்றும் படி கட்டாயப்படுத்தினர். மதம் மாறும் படியும் வலியுறுத்தினார்கள். சமீபத்தில் தீபாவளி கொண்டாடும் பொழுது கூட, எங்கள் பகுதிகளில் பயங்கரவாத ஆயுதங்களுடன் நுழைந்த நபர்கள், இந்து கடவுள்கள் சிலைகளை அடித்து நொறுக்கினார்கள். மதம் மாறாவிட்டால் நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தாருங்கள் என்று அவர்கள் கேட்கிறார்கள். ஏழ்மை நிலையை பயன்படுத்தி மதமாற்றம் முயற்சியில் ஈடுபட்ட கும்பலின் சதித்திட்டம் வெளிவந்து இருக்கிறது. 

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News