ஜாட் இளைஞர் கொலை சம்பவம் குறித்து ஆத்திரமூட்டும் செய்தியைப் பரப்பியதற்காக ஒருவர் கைது!

ஜாட் இளைஞர் கொலை சம்பவம் குறித்து ஆத்திரமூட்டும் செய்தியைப் பரப்பியதற்காக ஒருவர் கைது!

Update: 2021-02-08 08:19 GMT

பிஜினோர் பகுதியில் ஜாட் இளைஞர் ராஷித் சவுதரி கொலை சம்பந்தமான செய்திகளை சமூக வலைத்தளத்தில் ஆத்திரமூட்டும் வகையில் செய்திகளைப் பரப்பியதற்காக முகமத் நாஜிம் என்னும் இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் இது தொடர்பாகக் குற்றவாளிகள் மேல்  RASUKA சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


காவல்துறை நாஜிமை,  ராஷித் மரணத்தைக் கொண்டாடி வீடியோ ஒன்றைப் பதிவு செய்து மற்றும் தவறான கருத்துக்களைப் பரப்பியதற்காகக் கைது செய்துள்ளனர். கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறை சமூக வலைத்தளத்தைக் கண்காணித்து வருகின்றது. நாஜிம் தனது வலைத்தளத்தில், "எந்த நகரமாக இருந்தாலும் ஆட்சி எங்களுடையதாக இருக்கும்," என்று குறிப்பிடும் வகையில் செய்தியைப் பரப்பியிருந்தான். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகின்றது. 

மேலும் இந்த வீடியோவானது சைபர் கிரைமால் கண்டுபிடிக்கப்பட்டு, SP Dr. தரம்வீர் சிங் கட்டளையின் படி, நாஜிம் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டான். பல்வேறு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று சமூக வலைத்தளத்தில் ஆத்திரமூட்டும் செய்திகளைப் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று SP தெரிவித்தார். 

பிஜினோர் பகுதியில் ஜாட் இளைஞரான ராஷித் முஸ்லீம் இளைஞர்களால் கண்மூடித் தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டான். குற்றவாளிகளில் நான்கு பேரை காவல்துறை கைது செய்தது. ஒருவர் மட்டும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார். மேலும் இந்த சம்பவமானது முன் பகை காரணமாகவும் நடந்துள்ளது என்று கூறியுள்ளனர். 

Similar News