மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் மையமாக மாநிலத்தை மற்ற முதல்வர் யோகி திட்டம்!

மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் மையமாக மாநிலத்தை மற்ற முதல்வர் யோகி திட்டம்!

Update: 2021-01-29 18:30 GMT
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொழில்துறைகளை மேம்படுத்துவதற்காக முதல்வர் பல்வேறு முயற்சிகளை மற்றும் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அதே போன்று ஒரு புதிய திட்டமாக மாநிலத்தில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் வாகனங்களை உற்பத்தி செய்ய ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதன் முக்கிய நோக்கமானது உத்தரப் பிரதேச மாநிலத்தை ஒரு மின்சார வாகனங்களை(EVs)  தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை மையமாக மாற்றுவதே ஆகும். 
மேலும் மாநிலம் மின்சார வாகனங்களைத் தயாரிப்பதற்கான ஆராய்ச்சி, சான்றிதழ், சோதனை ஆகியவற்றை வழங்கும் ஒரு சிறந்த மையமாக மற்ற மாநில அரசு முயற்சி செய்து வருவதாக மாநில அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மின்சார வாகனங்களைத் தயாரிப்பதற்கான அனைத்து உதவிகளையும் மாநிலரசு செய்து தரும் என்று அவர் உறுதியளித்தார். 
"மாநிலத்தில் மின்சார வாகனங்கள் தயாரிப்பதற்கான மையங்கள் அமைக்க பல்வேறு சர்வதேச ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்களிடம் இருந்து திட்டங்கள் பெறப்பட்டுள்ளன. மாநிலத்தில் தொழில்துறைகளை மேம்படுத்துவதற்கான அனைத்து உதவிகளையும் அவர்களுக்குச் செய்து தருவோம், " என்று ஆதித்யநாத் தெரிவித்தார். இந்த திட்டம் விரைவில் நிறுவப்படும் அதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் தொழில்துறையிடம் இருந்து பெறப்படும் என்று முதல்வர் கூறினார். இது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முக்கிய பங்காக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 
மேலும் மின்சார வாகனங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்குச் சாலை வரி விலக்கு மற்றும் பதிவு கட்டண விலக்கு குறித்தும் அவர் உரையாற்றினார். இந்த மின்சார வாகன துறை தற்போது வளர்ந்து வரும் நிலையில் அதனை ஊக்குவிப்பது அவசியம் என்றும் அவர் கூறினார். "மாநிலத்தில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் பொதுமக்கள் உதவிக்காகத் தேவையான சார்ஜிங் நிலையமும் அமைக்கப்படும். பெட்ரோல் நிலையங்களும் இதுபோன்று சார்ஜிங் நிலையங்களை அமைக்க உதவவேண்டும்," என்று ஆதித்யநாத் கூறினார். 
மேலும் நகரத்தில் புகை மாசுபடுத்தி மற்றும் மக்களுக்கு ஒலி சத்தத்தைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் ஆட்டோ ரிக்க்ஷா மற்றும் டீசல் டெம்போவை தவிர்த்து இ-ரிக்க்ஷாவை மேம்படுத்தவும் அவர் அழுத்தம் கொடுத்தார். மேலும் டீசல் ரிக்க்ஷா ஓட்டுபவர்களுக்கு இ-ரிக்க்ஷா வாங்க மாநிலத்தில் அல்லது மத்திய அரசின் சுயஉதவி திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.  மேலும் இ-ரிக்க்ஷா ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளிப்பது, சாலை விதிமுறையைகடைபிடிப்பது மற்றும் வழியைச் சரியாக அமைத்துக் கொடுப்பது போன்றவை பற்றியும் அவர் வலியுறுத்தினார். 

Similar News