உ.பி: அதிர்ச்சி.! கோவிலுக்குள் இரத்த வெள்ளத்தில் கிடந்த இந்து பூசாரியின் சடலம்.!

உ.பி: அதிர்ச்சி.! கோவிலுக்குள் இரத்த வெள்ளத்தில் கிடந்த இந்து பூசாரியின் சடலம்.!

Update: 2021-01-22 12:35 GMT
உத்தரப் பிரதேசம் லக்னோ பகுதியில் ஒரு கவலைக்கிடமான சம்பவமாக, கோவிலுக்கு உள்ளே இந்து பூசாரியின் சடலம் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. அறிக்கையின் படி, புதன்கிழமை அன்று லக்னோ பகுதியில் ஒரு இந்து கோவிலில் 80 வயதுடைய பூசாரி இறந்து கிடந்துள்ளார். காவல்துறை அறிக்கையில் அவரது தலையில் காயமிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கோவில் வளாகத்துக்கு உள்ளே அவரது சடலம் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாக லக்னோ பகுதியில் காவல் கண்காணிப்பாளர் ஹிர்தேஷ் குமார் தெரிவித்தார். லக்னோவில் சிவபுரி கிராமத்தில் அந்த கோவில் அமைந்துள்ளது. அந்த பூசாரி பாக்கீர் தாஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். திருடன் வந்ததற்கான அடையாளம் எதுவும் காணப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவிலில் இருந்து எந்த பொருளும் திருப்பிடவில்லை என்றும் SP தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணையும் சென்று கொண்டிருக்கின்றது. 
கடந்த சில ஆண்டுகளாகவே பூசாரி கோவிலில் தனியாக வசித்து வருகிறார் என்று வட்டார அதிகாரி ஹிரிதேஷு கத்தரியா தெரிவித்தார். மேலும் முதற்கட்ட விசாரணை முடிவில் தனி பகை கூட காரணமாக இருக்கலாம் என்று கூறினார். தனிப்பட்ட பகை குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார். அடையாளம் தெரியாத நபர் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளதாக FIR பதிவு செய்த பின்பு உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதாகவும் குறிப்பிட்டார். 
கடந்த சில நாட்களாகவே இந்து பூசாரிகளைக் கொலை செய்வது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. கடந்த ஆண்டு அக்டோபரில், ராஜஸ்தானில் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற சில நபர்கள் அங்குள்ள பூசாரியைத் தீவைத்து எரிக்க முயன்றனர். அந்த ஆண்டு செப்டம்பரில் கர்நாடக அர்கேஸ்வர கோவிலில் உள்ள மூன்று பூசாரிகள் அடையாளம் தெரியாத குற்றவாளிகளால் குத்தி கொலை செய்யப்பட்டனர். அந்த ஜூலையிலும் ஒரு பூசாரி கொலை செய்யப்பட்டார். 

Similar News