கங்கை ஆற்றைச் சுற்றி 1,038 ஆரத்தி தளங்களை அமைக்கவுள்ள யோகி அரசு!

கங்கை ஆற்றைச் சுற்றி 1,038 ஆரத்தி தளங்களை அமைக்கவுள்ள யோகி அரசு!

Update: 2021-02-03 10:59 GMT

உத்தரப் பிரதேசத்தில் மாநிலத்தில் அனைத்து துறைகளையும் மேம்படுத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார். தற்போது சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறையை ஊக்கமளிக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளார். கங்கையில் ஆரத்தி செய்வதற்காக 1,038 புதிய தளங்களை பிஜினோர் மற்றும் பல்லியா பகுதியைச் சுற்றியுள்ள மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைக்கவுள்ளார். 

 பிஜினோர் மற்றும் பல்லியா வரை கங்கை ஆற்றைச் சுற்றி ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாவட்டங்களை இணைக்கும் வகையில் புதிய ஆரத்தி தளங்களை அமைக்க மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த புதிய ஆரத்தி தளங்கள் கங்கை ஆற்றங்கரை பகுதியில் பிஜினோரில் இருந்து பல்லியா வரை உத்தரப் பிரதேசத்தின் இறுதி கிராமம் வரை முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான முழுமையான திட்டங்களும் சுற்றுலா அமைச்சகத்துடன் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. மேலும் பொதுமக்கள் பங்கேற்பைக் கருத்தில் கொண்டு கங்கை ஆற்றில் ஆரத்திக்கான நேரங்கள் ஒவ்வொரு நாளும் குறிப்பிடப்பட்ட நிகழ்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த திட்டமானது இந்த கிராமங்களில் உள்ள பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மத இடங்களை சுற்றுத்தலமாக மாற்ற டிசம்பர் மாதத்தில் மத்திய ஜல் சக்தி துறையின் அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியதை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Similar News