தூய்மை இந்தியாவுக்கான முதற்படி உங்களிடம் இருந்து... பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைங்க...
பிளாஸ்டிக் பைகளிலிருந்து துணிப் பைகளுக்கு மாறுவோம் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பேசினார்.
மனதின் குரல் நிகழ்ச்சியின் 98வது நிகழ்ச்சி, சுய உதவிக் குழுவை நடத்தும் ஒடிசாவின் கேந்திரபாடா மாவட்டத்தைச் சேர்ந்த கமலா மொஹரானாவின் பங்களிப்புகளை பிரதமர் எடுத்துரைத்தார். பால் பாக்கெட்டுகள் மற்றும் இதர பிளாஸ்டிக் பேக்கிங் பொருட்களில் இருந்து கூடைகள், மொபைல் ஸ்டாண்டுகள் போன்ற பல பொருட்களை இந்தக் குழுவில் உள்ள பெண்கள் உருவாக்குகிறார்கள். இது அவர்களுக்கு நல்ல வருமானம் பெற்றுத் தருகிறது.
அதோடு தூய்மையை உறுதி செய்கிறது இதனால் பெரிய அளவில் சம்பாதிக்க முடியும். நாம் நினைத்தால் தூய்மை இந்தியாவுக்கான பெரிய பங்களிப்பை செய்ய முடியும். குறைந்த பட்சம் நாம் அனைவரும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப் பைகளைப் பயன்படுத்துவதாக உறுதிமொழி எடுக்க வேண்டும். உங்கள் உறுதியான தீர்மானம் உங்களுக்கு எந்தளவு திருப்தியை அளிக்கும் என்பதை நீங்களே உணர முடியும் என்பதோடு மற்றவர்களுக்கும் ஊக்கமளிக்கும்.
பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை உரையான மனதின் குரல், அக்டோபர் 3, 2014 அன்று முதன்முதலில் ஒளிபரப்பப்பட்டது. ஏப்ரல் 30, 2023 அன்று 100 வது நிகழ்ச்சியை எட்டுகிறது. இதுவரையிலான 99 நிகழ்ச்சிகளில், மிகச் சிறப்பான சேவையாற்றிய 700 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் சுமார் 300 அமைப்புகளைப் பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். வானொலி நிகழ்ச்சி தேசத்தின் மனநிலையை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல், நேர்மறையான மாற்றத்திற்கான மக்களின் நடவடிக்கைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
Input & Image courtesy: News