உத்தரகாண்ட் சம்பவம்: 26 சடலங்கள் மீட்பு.. 171 பேர் மாயம்.. டி.ஜி.பி. தகவல்.!

உத்தரகாண்ட் சம்பவம்: 26 சடலங்கள் மீட்பு.. 171 பேர் மாயம்.. டி.ஜி.பி. தகவல்.!;

Update: 2021-02-09 09:03 GMT

உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் (8ம் தேதி) திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் பனி உருகி தவுளிகங்கா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது நதிகரையோரம் உள்ள தபோவன் பகுதியில் தேசிய அனல்மின் நிலையம் உள்ளது. இதில் பணிபுரிந்தவர்கள் சுமார் 170க்கும் மேற்பட்டோர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

அம்மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் கூறும்போது, சுமார் 150 பேர் வரை இந்த பனிச்சரிவில் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது எனக்கூறினார். தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படை, இந்திய ராணுவ வீரர்கள் என அனைவரும் கடந்த 3 நாட்களாக மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அது மட்டுமின்றி இந்திய விமான படையின் இரண்டு மி17 ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏ.எல்.எச்.துருவ் ஹெலிகாப்டர் என 3 ஹெலிகாப்டர் களத்தில் ஈடுபட்டுள்ளது. மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளது. மீட்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், விபத்து நடந்த பகுதியில் அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் சென்று மீட்புப்பணியை துரிதப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், உத்தரகாண்ட் டி.ஜி.பி. அசோக் குமார் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, நேற்று இரவு 8 மணி வரையில் 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 171 பேர் காணாமல் போயுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம் எனக் கூறினார்.
 

Similar News