உத்தரகண்ட் சம்பவம்: ஆற்றில் நீர் மட்டம் உயர்வால் தற்காலிகமாக மீட்புப் பணிகள் நிறுத்தம்.!

உத்தரகண்ட் சம்பவம்: ஆற்றில் நீர் மட்டம் உயர்வால் தற்காலிகமாக மீட்புப் பணிகள் நிறுத்தம்.!

Update: 2021-02-11 16:46 GMT

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 7ம் தேதி பனிப்பாறை வெடித்த காரணத்தினால் ரிஷி கங்கா ஆற்றில் வெள்ளம் உயர ஆரம்பித்தது. அப்போது ஆற்றின் குறுக்கே வேலை பார்த்து வந்தவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக மீட்பு பணியில் ராணுவம், மற்றும் தேசிய பேரிடம் மீட்புக்குழு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், ஆற்றில் அளவுக்கு அதிகமான நீர்வரத்து இருப்பதால் மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்புப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வெள்ள நீர் குறையும் பட்சத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ராணுவம் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது வரை 35 பேர் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 200க்கும் மேற்பட்டவர்களின் நிலைமை என்ன என்பது தெரியாமல் உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அனைவரும் உயிருடன் திரும்ப வேண்டும் என்பது நாட்டு மக்களின் பிரார்த்தனையாகவும் உள்ளது.

Similar News