700 கோடி ரூபாயில் பிரம்மாண்ட விளையாட்டு பல்கலைக்கழகம்! பிரதமர் அடிக்கல் நாட்டினார்!

Update: 2022-01-02 10:53 GMT

உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில்,  சுமார் 700 கோடி ருபாய்  மதிப்பீட்டில் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி இன்று  அடிக்கல் நாட்டியுள்ளார். 


உத்தரபிரதேச மாநிலம் நாட்டின்  முன்மாதிரி மாநிலமாக விளங்கிவருகிறது. சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும்  கலாச்சாரம் என அனைத்து திசைகளிலும் சிறந்த விளங்குகிறது .


மாநிலத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் கடந்த 5 ஆண்டுகளாக யோகி ஆதித்யநாத் அவர்களது  ஆட்சி அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவரது ஆட்சிக் காலம் முடிவுரையில் இருப்பதால் இந்த ஆண்டு உத்திரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி உத்தரபிரதேச மாநில அரசியல் சூடு பிடித்துள்ளது.


அதேவேளையில் உத்தரபிரதேச மாநில அரசும், மத்திய அரசும் மாநில வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்களை அந்த மாநில மக்களுக்கு அர்ப்பணித்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை ஒரு மணி அளவில்  பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீரட் நகருக்கு வருகை தந்து பல்வேறு சிறப்பம்சம் கொண்ட மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

அடிக்கல் நாட்டப்பட்ட  பல்கலைக்கழகத்தின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் பல்கலைகழகம்.

540 விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் 540 விளையாட்டு வீரர்கள் உட்பட 1080 விளையாட்டு வீரர்கள் பயிற்சி அளிக்கும் பயனுள்ள பல்கலைக்கழகமாக இது அமையும்.

செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து மைதானம் ,கபடி மைதானம் மற்றும்  டென்னிஸ் மைதானம் அமைக்கப்படும்.

உடற்பயிற்சி கூடம், செயற்கை ஓட்டம் அரங்கம் மற்றும்  நீச்சல்குளம் அமைகின்றது.

துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ்,பளுதூக்குதல், வில்வித்தை, விளையாட்டுகளுக்கு பயிற்சி பெறும் வசதிகளும் இங்கே அமைகிறது.


உத்தரபிரதேச மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசும்,  உத்தர பிரதேச அரசும் பல்வேறு நல திட்டங்களை அமல்படுத்தி வரும் நிலையில், இந்த பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டு விழா உத்தர பிரதேச அரசியலில்  முக்கியத்துவம் பெறுகிறது. 

Maalaimalar

Tags:    

Similar News