இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு கொரோனா தடுப்பூசி: முதல் DNA தடுப்பூசி இது !
இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்காக சைடஸ்கெடிலா நிறுவனத்தின் ‘சைகோவிட்’ என்ற கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உலகின் உருமாறிய கொரோனவைரஸ் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக பல வெளிநாடுகளில் முழுமையான ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் மக்கள் இந்த நோய் தொற்றை எதிர்க்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி சென்றுள்ளதா? என்பதை உறுதி செய்யும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் தற்போது மற்றும் ஒரு தடுப்பூசிக்கு அவசரகால ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் தற்போது உள்நாட்டு தயாரிப்புகளான கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ரஷியாவின் ஸ்புட்னிக்-V, அமெரிக்காவின் மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் என 5 தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பொழுது அகமதாபாத்தில் உள்ள சைடஸ்கெடிலா நிறுவனத்தின் 'சைகோவிட்' என்ற தடுப்பூசிக்கும் இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் இதை 12-வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 'சைகோவிட்' மருந்தை பயன்படுத்தலாம் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே இந்த தடுப்பூசி தான் இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான முதல் தடுப்பூசி ஆகும். உலகிலேயே முதன்முதலாக உருவாக்கப்பட்ட முதல் DNA தடுப்பூசி இது. இது முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Image courtesy: NDTV news