மார்ச் 1ம் தேதி 60 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி.. மத்திய அரசு உத்தரவு.!
மார்ச் 1ம் தேதி 60 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி.. மத்திய அரசு உத்தரவு.!
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணியானது துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 2து கட்டமாக 60 வயதைக் கடந்தவர்களுக்கும், 45 வயதைக் கடந்த இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பு போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
வருகின்ற மார்ச் 1ம் தேதி முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்த இணை நோய்கள் உள்ளவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.இதற்காக 10,000 அரசு மருத்துவ மையங்களும், 20,000 தனியார் மருத்துவமையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும் எனக் கூறினார். இதனால் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் 60 வயது கடந்தவர்களின் பெயர் பட்டியலை மாநில அரசுகள் எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.