74 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி மீண்டும் சாதனை படைத்த இந்தியா !

நேற்றுடன் இந்தியா 74 கோடி தடுப்பூசிகளை செலுத்தி மீண்டும் சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

Update: 2021-09-13 13:40 GMT

நோய் தொற்றிலிருந்து அனைவரும் காப்பதற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது. மேலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகவும் இந்தத் தடுப்பூசி பயன்பாடு தான் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது. இந்தியா முழுவதும் நேற்று இரவு வரை குறிப்பாக 74.32 கோடிக்கும் அதிகமான டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சிக்கிம், கோவா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டவையாக அறிவிக்கப் பட்டுள்ளன. 


மேலும் இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை படி, "நேற்று இரவு 8:00 மணி நிலவரப்படி, நேற்று மட்டும் 50 லட்சத்து 25 ஆயிரத்து 159 'டோஸ்' தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இதுவரை நாடு முழுதும் போடப்பட்ட தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை, 74.32 கோடியை கடந்தது.கோவா, ஹிமாச்சல பிரதேசம், சிக்கிம், லடாக், லட்சதீவு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.


இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 100 சதவீத மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த மகத்தான பணியை வெற்றிகரமாக செய்து முடித்த சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டுக்கள் என்று மத்திய அரசின் சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Input & image courtesy:Livemint



Tags:    

Similar News