தாய் மொழி அடையாளம் கொடுக்கும்: குடியரசுத் துணைத் தலைவர் உரை !

ஒருவருடைய தாய் மொழி என்பது சுய அடையாளம் மற்றும் சுயமரியாதையை கொடுக்கும் என்று துணை குடியரசு தலைவர் காணொலிக் கருத்தரங்கில் தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-02 13:30 GMT

 தாய்மொழியை பாதுகாப்பது குறித்து நேற்று ஏற்பாடு செய்திருந்த காணொலிக் கருத்தரங்கில் உரையாற்றிய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, இந்திய மொழிகளைப் பாதுகாக்கவும், அவற்றிற்கு புத்துணர்ச்சியூட்டவும், புதுமையான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை எனக் கூறினார். மக்கள் இயக்கத்தால் மட்டுமே மொழிகளைப் பாதுகாக்க முடியும், மேலும் அவற்றின் தொடர்ச்சியான நிலையை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். குறிப்பாக மொழியின் பாரம்பரியத்தை நமது எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதில் மக்கள் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.


இந்திய மொழிகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான, மக்களால் உந்தப்பட்ட முன்முயற்சிகள் குறித்துப் பேசுகையில், ஒரு மொழியை வளப்படுத்துவதில் மொழிபெயர்ப்பு ஆற்றும் முக்கிய பங்கு குறித்து எடுத்துரைத்தார். இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பின் தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். பழமையான இலக்கியங்களை இளைஞர்களுக்குப் புரியும் வகையில் பேச்சு வழக்கில் உருவாக்கவும் குடியரசு துணைத் தலைவர் அறிவுறுத்தினார். 


ஒருவர் தாய் மொழியைப் புறக்கணித்தால், தமது சுய அடையாளம் மற்றும் சுயமரியாதையையும் இழக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார். எனவே தாய்மொழி ஒருவருக்கு அடையாளத்தை கொடுக்கும். புதியக் கல்வி ஆண்டு முதல் 8 மாநிலங்களில் உள்ள 14 பொறியியல் கல்லூரிகள், பல்வேறு இந்திய மொழிகளில் பாடங்களை வழங்க அண்மையில் முடிவெடுத்துள்ளதை அவர் பாராட்டினார். அதேபோல் அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாப்பதற்காக கல்வி அமைச்சகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கும் குடியரசு துணைத் தலைவர் பாராட்டு தெரிவித்தார்.

Input: https://www.thehindu.com/news/national/andhra-pradesh/venkaiah-naidu-for-peoples-movement-to-protect-telugu/article35647746.ece

Image courtesy: Thehindu news 


Tags:    

Similar News