வன்முறையை தூண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்! உச்சநீதிமன்றம் கண்டிப்பு!

வன்முறையை தூண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்! உச்சநீதிமன்றம் கண்டிப்பு!

Update: 2021-01-29 11:54 GMT

நாட்டில் சமீபகாலமாக வன்முறையை தூண்டும் விதமாக தகவல்களை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகின்றது. இது போன்ற நிகழ்ச்சிகளால் மக்கள் திசை மாறி செல்லவும் வாய்ப்புள்ளது. எனவே மக்களை வன்முறைக்கு தூண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், செய்திகளும் கடுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டெல்லியில் முஸ்லீம் அமைப்புகள் சேர்ந்து தப்லீக் ஜமாத் என்ற கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டம்தான் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரு ஹாட்ஸ்பாட்டாக இருந்தது.

இந்நிலையில், முஸ்லீம் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்றை செய்தது. அதில் வன்முறையை தூண்டும் தொலைக்காட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஒளிபரப்பு சங்கம், பத்திரிகை சங்கம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மேலும், நாட்டில் வன்முறையை தூண்டும் நிகழ்ச்சிகளை தடுப்பதில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை என நீதிபதி பாப்டே கூறினார். உண்மையான செய்திகளை வெளியிடுவதில் எந்த சிக்கல்களும் இல்லை. மற்றவர்களைத் தூண்டிவிடும் வகையில் திட்டமிடப்பட்டால், அது ஒரு பிரச்சனை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் வன்முறையை தூண்டும் விதமாகவே கருத்துகளை ஒளிபரப்பி வருகின்றது. விவசாயிகள் நடத்திய வன்முறை சம்பவத்தை நியாயப்படுத்தியும் ஒரு சில தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டு வருகிறது. உண்மை நிலையை அறிந்து செய்தி வெளியிட்டால் அனைவருக்கும் நன்மை இருக்கும். ஆனால் போலியான செய்திகளை வெளியிட்டு மக்களை போராட்டத்திற்கு தூண்டுவது சரியில்லை. எனவே அது போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

Similar News