இந்தியாவை அச்சுறுத்தும் புதிய வகை வைரஸ் காய்ச்சல்: கண்காணிப்பை தீவிரப்படுத்தும் மத்திய அரசு!
இந்தியாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சலுக்கு தற்பொழுது இரண்டு பேர் பலியாகி இருக்கிறார்கள்.
இந்தியாவில் தற்பொழுது பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்ஃபோர் இன்சுலின் வைரஸின் துணை வகையான இந்த வைரஸ் H1N2 என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோர்களை தான் அதிகம் தாக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 90 பேர் இந்த வகை வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்ட உள்ளது.
இதில் கர்நாடகாவில் 26 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனுடைய முதல் உயிரிழப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு ஹாசன் மாவட்டத்தில் 82 வயதான முதியவர் ஒருவர் இறந்து இருக்கிறார். அதைப்போல ஹரியானாவிலும் இந்த வைரஸ் பாதித்த ஒருவர் இறந்ததாக தகவல்கள் தெரிவித்து இருக்கிறது.
பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளுக்கும் ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் இருந்ததாகவும், குறிப்பாக நீரிழிவு நோய் உயர் ரத்த அழுத்தம் இருந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறது. இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சலுக்கு இந்தியாவில் இரண்டு பேரும் பலியாகி இருக்கும் சம்பவம் தற்பொழுது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar News