அப்பாவி சிவபக்தர்கள் மீது தடியடி- மேற்கு வங்க போலீஸ் அட்டூழியம் !

இந்த கோவில் ஷ்ரவண மாதத்தில் சிவ பக்தர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2021-08-18 03:03 GMT

கடந்த திங்கள்கிழமை (ஆகஸ்ட் 16) அன்று, மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவின் பெனியடோலா பகுதியில் உள்ள பிரம்மாண்டமான பூத்நாத் கோவிலில் பிரார்த்தனை செய்ய திரண்ட இந்து பக்தர்கள் மீது மேற்குவங்காள காவல்துறை கொடூரமாக தடியடி நடத்தியது. இதன் விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களும் திறக்கப்பட்டுள்ளது. எனினும் பூதநாத் கோவில் 'கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள்' காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்த கோவில் ஷ்ரவண மாதத்தில் சிவ பக்தர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு திங்கட்கிழமையும், கொல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள். பக்தர்களுக்காக கோவில் வளாகம் மூடப்பட்டிருப்பதால், அவர்கள் வழக்கமாக வாயில்களுக்கு வெளியே கூடி பிரார்த்தனை செய்வார்கள்.

நேற்று கோவிலில் பக்தர்கள் பிரார்த்தனை செய்ய முயன்றபோது, ​​அவர்கள் சீருடை அணிந்த காவல்துறையினரால் இரக்கமின்றி தாக்கப்பட்டனர். தவிர, சீருடை அணியாத இரண்டு ஆண்கள் காவி உடைகள் அணிந்த ஒரு சிவ பக்தரை தாக்கியதை காண முடிந்தது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது மேற்கு வங்கத்தின் பா.ஜ.க பிரிவால் ட்விட்டரில் பகிரப்பட்டது.



மாநில துணைத் தலைவர் ரித்தேஷ் திவாரி இந்த விஷயத்தைப் பற்றி பேசுகையில், "பூத்நாத் கோவிலுக்கு முன்னால், சிவ பக்தர்கள் கொல்கத்தா போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டனர். இது பார்ப்பதற்கே மிகவும் வலி தரக் கூடியதாக இருந்தது. அதிர்ச்சி, காட்டுமிராண்டித்தனம்.!" என்றார். பின்னர் வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சியை ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியுடன் ஒப்பிட்டார்.



திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின் போது, ​​அங்கு ஆயிரக்கணக்கான இந்துக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

விஸ்வஹிந்து பரிஷத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் மே மாதம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மே 2 அன்று மேற்கு வங்கத்தில் கொடூரமான அரசியல் வன்முறை தொடங்கியது. துரதிருஷ்டவசமாக, 3500 க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் இந்த வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்." என்று தெரிவித்திருந்தார்.   


Cover Image Courtesy: OpIndia 

Tags:    

Similar News